இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு
கிழக்கு மாகாணத்தில் பற்றாக்குறை நிலவுகையில்
மத்திய அரசு சேவைக்கு எவரையும் விடுவிக்கக்கூடாது
-
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் சங்கம்
(அஸ்லம்)
கிழக்கு
மாகாணத்தில் கடமையாற்றுவதற்கு இலங்கை கல்வி நிருவாக
சேவை அதிகாரிகள்
சுமார் 172 பேருக்கு பற்றாக்குறை நிலவுகையில்
மத்திய அரசின்
கீழ்வரும் பாடசாலைகள்
மற்றும் நிறுவனங்களுக்கு
எவரையும் விடுவிக்கக்
கூடாது என இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
சங்கம் கிழக்கு
மாகாண ஆளுனரையும்,
கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக் குழுவையும்
கேட்டுள்ளது.
இது
தொடர்பாக மேற்படி
சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முஹம்மட்
முக்தார் அனுப்பி
வைத்துள்ள கடிதத்தில்
தெரிவித்திருப்பதாவது,
கிழக்கு
மாகாணத்தின் வலயக்கல்வி அலுவலகங்கள், கோட்டக்கல்வி அலுவலகங்கள்
என்பவற்றில் காணப்படும் பதவி நிலை உத்தியோகத்தர்
பதவிகளுக்கு இலங்கை கல்வி நிருவாக சேவையைச்
சேர்ந்த 172 அதிகாரிகளுக்கு வெற்றிடம் நிலவுகின்றது. இது
பாரியதொரு நிருவாகப் பிரச்சினையை கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு
மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்காகவே
மத்திய கல்வி
அமைச்சு இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளை
இடைக்கால ஏற்பாடாக
அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் அரசியல் காரணங்களுக்காகவும்,
சில அழுத்த
சக்திகளுக்காகவும் இலங்கை கல்வி
நிருவாக சேவை
அதிகாரிகளை கிழக்கு மாகாண அரச சேவையிலிருந்து
மத்திய அரசு
சேவைக்கு கிழக்கு
மாகாணக் கல்வி
அமைச்சு மூலமாக
விடுவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு
மாகாண முன்னாள்
ஆளுனர் மொஹான்
விஜயவிக்ரம அவரது பதவிக்காலத்திற்குள் எந்தவொரு இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரியையும்
கிழக்கு மாகாண
சேவையிலிருந்து மத்திய அரசு சேவைக்கு விடுவிக்க
முடியாத ஒரு
கொள்கையைக் கொண்டிருந்தார். பதில் நியமனம் வழங்கினால்
மட்டுமே தன்னால்
விடுவிக்க முடியுமென
கடுமையான நிலைப்பாட்டைக்
கொண்டிருந்தார்.
இவ்வாறான
ஒரு நிலைப்பாட்டை
தற்போதைய ஆளுனரும்
கொண்டிருப்பது எமக்கு நன்கு தெரியும். அதனை
எந்தக்காரணத்திற்காகவும் தளர்த்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறான விடுவிப்புகள் இடம்பெற்றால்
எமது சங்கம்
நீதிமன்றம் மூலமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய
நிலை ஏற்படும்
எனவும் சங்கம்
தெரிவித்துள்ளது.
இதேவேளை
இலங்கை கல்வி
நிருவாக சேவை
பிரமாணக்குறிப்பு கிழக்கு மாகாணப்பாடசாலைகள் எவற்றிற்கும் இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகள்
அதிபர்களாக நியமிக்கப்படுவதை அங்கீகரிக்காத
நிலையில் கிழக்கு
மாகாணத்திலுள்ள சில பாடசாலையில் சில இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகள்
அதிபர்களாகக் கடமையாற்றி வருகின்றனர். அவர்களை உடனடியாக
அலுவலகங்களுக்கு திருப்பி அழைத்துக் கொளளுமாறு மேற்படி
சங்கம் கோரியுள்ளது.
0 comments:
Post a Comment