பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

எதிர்வரும் 10ம் திகதி ப்பான் விஜயம்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதமருடன் இந்த விஜத்தில் பங்குகொள்ளவுள்ளார்.

16ம்திகதி வரை ஜப்பானில் தங்கி இருக்கவுள்ள பிரதமர் இந்த விஜயத்தில் ஜப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் மேலும் உதவும் என்று ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்த விஜயத்தில் பிரதமருடன் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம , மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அசு மாரசிங்க ,பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , மேலதிக செயலாளர் சமன் அத்துவெட்டி , திருமதி சந்திர பெரேரா ஆகியோரும் பயணம்செய்யவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top