சைட்டம் குறித்த அரசாங்கத்தின் யோசனைகள் இன்று
- அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
சைட்டம் நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்த அரசாங்கத்தின் யோசனைகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மாலபே சைட்டம் நிறுவனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் யோசனைகள் இன்று வெளியிடப்படவிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் செயலாளர் அறிக்கையாக இதனை வெளியிடவிருக்கிறார். இதுபற்றி பாராளுமன்றத்தில் கலந்துரையாடவும் தாம் தாயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment