42000ஆயிரம் அடி உயரத்தில் பறந்த

துருக்கிய விமானத்தில் பிறந்த குழந்தை

That's one extra for the passenger list! Woman gives birth at 42,000 feet on Turkish Airlines flight to Ouagadougou

Nafi Diaby went into labour when flying from Guinea to Burkina Faso
She delivered baby girl Kadiju at 42,000 feet on a Turkish Airlines flight
Cabin crew sprung into action and mother and baby are said to be 'doing fine'

42000ஆயிரம் அடி உயரத்தில் பறந்த துருக்கிய விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு விமான குழுவினர் பிரசவம் பார்த்த சம்பவமொன்று நடந்துள்ளது.
கின்னியாவின் (Guinea) தலைநகர் கொனக்ரியிலிருந்து ஒக்காடவ்கெளவ் வழியாக இஸ்தான்புல்லிற்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் இருந்த 28வாரங்கள் உடைய நஃபி டியாபி என்ற கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தீடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இவர் விமானத்தில் உள்ள பணிப்பெண்களிடன் உதவியுடன் பெண் குழந்தையினை பெற்றெடுத்தவுடன் விமானம் உடனடியாக புர்கினோ ஃபாசோவின் தலைநகரில் தரையிறக்கப்பட்டு தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தாயும், கடிஜீ என்று பெயரிடப்பட்ட அந்த பெண் குழந்தையும் நலமாக இருப்பதாக அந்த துருக்கிய விமான சேவையானது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான விமான சேவைகளில் 36 வார வரையிலான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் 28வது வார வரையில் உள்ளவர்கள் குழந்தை பெறும் திகதியினை உறுதிப்படுத்தும் வண்ணம் மருத்துவ அறிக்கையினை சமர்பிக்கவேண்டும்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top