50 மணித்தியாலங்களாக தொடர்ந்து

கார் ஒன்றுக்கு முத்தம் கொடுத்து

கார் பரிசாக  வென்ற இலங்கை பெண்

அமெரிக்காவில் 50 மணித்தியாலங்களாக கார் ஒன்றுக்கு முத்தம் கொடுத்து இலங்கை பெண்ணொருவர் பெறுமதியான பரிசொன்றை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஆஸ்டின் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய டிலினி ஜயசுரிய என்ற இலங்கை பெண்ணொருவர் தொடர்ந்து 50 மணித்தியாலங்களுக்கு முத்தம் கொடுத்து இவ்வாறு கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளார்.Kia Optima LX என்ற காரினை அவர் பரிசாக வென்றுள்ளார்.
தென்கிழக்கு கியாவின் ரவுன்ட் ரொக் பகுதியில் 96.7 KISS FM என்ற வானொலியினால் நடத்தப்பட்ட “Kiss a Kia” என்ற போட்டியில் பங்குபற்றியதன் மூலம் இப்பெண்ணுக்கு  இது சாத்தியமாகியுள்ளது.
இலங்கை பூர்வீகத்தை கொண்ட ஜயசூரிய மாநில சுகாதார ஆய்வகம் ஒன்றில் கடமையாற்றுகின்றார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top