திறமைகளை வெளிக்காட்டும் வளத்தைப் பறிக்காதீர்கள்!
ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மாணவர்கள்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அப்பாடசாலை மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கமாக இப்பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர்.
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இரு மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அண்மையில் அடிக்கல் நடப்பட்டு, பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் குறித்த இக்கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் அமைப்பதன் மூலம் தமது விளையாட்டுத் திறமைகள் மழுங்கடிக்கப்படும் என்பதனால் அதனை வேறு ஒரு இடத்தில் நிர்மாணிக்குமாறு கோரியே தாம் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரமாக அணிவகுத்து பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
0 comments:
Post a Comment