பொத்துவிலில் 67 கோடி ரூபா செலவில் 5 கிணறுகள்
அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
மக்கள்
அதிர்ச்சி
பொத்துவில்
பிரதேசத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையினைத்
தீர்க்கும் பொருட்டு, அங்கு ஐந்து கிணறுகளை
அமைத்துள்ளதாகவும், அதற்காக தனது
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாவை செலவு செய்ததாகவும்
முஸ்லிம் காங்கிரஸ். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ள கணக்கு, மக்களிடையே
பாரிய அதிர்ச்சியினையும்,
சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில்
பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில்
கலந்து கொண்டு
உரையாற்றிய போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்படி
தகவலைத் தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே
இங்கிருந்த ஐந்து கிணறுகளை மூடிவிட்டு, புதிதாக
05 கிணறுகளைத் தோண்டினோம். என்னுடைய அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாய்களை அதற்காக நான்
செலவளித்திருக்கிறேன். சாதாரணமாக, இவ்வாறான
பெரிய தொகையினைச்
செலவு செய்து
இவ்வாறு கிணறுகளை
நாம் தோண்டுவதில்லை.
இந்தக் கிணறுகளை
மிக ஆழமாகத்
தோண்டியிருக்கிறோம். என்று, தனது
உரையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் விரிவாகத்
தெரிவித்துள்ளார்.
இந்தக்
கணக்கின் படி,
ஒரு கிணற்றினை
தோண்டுவதற்கு 134 மில்லியன் ரூபாய் (13 கோடி 40 இலட்சம் ரூபாய்கள்) செலவாகி இருக்க
வேண்டும்.
இந்த
நிலையில், கிணறு
ஒன்றினை நிர்மாணிப்பதற்கு
இவ்வாறானதொரு பெருந்தொகை நிதி செலவாகியிருப்பது சாத்தியம்தானா என்கிற கேள்வி,
மக்களிடையே எழுந்துள்ளது.
.
0 comments:
Post a Comment