ராஜித பௌண்டேஷன் அனுசரணையில்
தர்காநகர் ஸாஹிராவில்
விஞ்ஞான உயர்வகுப்பு ஆரம்பம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
களுத்துறை மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு கற்கை நெறிகளில் பிரசித்தி பெற்ற தர்காநகர் ஸாஹிராக் கல்லூரியில் 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தர வகுப்புக்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம்திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிறந்த தகைமையுடைய ஆசிரியர்களால் பாடபோதனை மேற்கொள்ளப்படுவதுடன் நாடளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு சுகாதாரசேவைகள், சுதேசமருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரத்னவின் அனுசரணையில் ,டாக்டர் எம்.எச்.எம். ரூமி தலைமையில் இயங்கும் ‘ராஜிதபௌன்டேஷன்’ இன் அனுசரணையுடன் மேலதிகவகுப்புக்கள் பாடசாலை வளாகத்திலேயே நடாத்தப்படவுள்ளன.
இரசாயனவியல் - எம்.எப்.எம்.ரிஸ்வான் (ஏ.எஸ்.டீ.ஏ. புத்தளம்),எம்.எஸ்.எம்.நப்லான், பௌதிகவியல் -எஸ்.பி (ஏ.எஸ்.டீ.ஏ. யாழ்ப்பாணம்), நந்தகுமார்(கொழும்பு), ஆ.நிஸாம்தீன்(திக்வல்ல), உயிரியல் -ஏ.எல்.மிஸ்கீன்(ஏ.எஸ்.டீ.ஏ. அநுராதபுரம்), இணைந்தகணிதம் -எம்.எஸ்.எம். ஸபான் (புத்தளம்,கொழும்பு,திகாரி), ஆ.நபீல்(புத்தளம் ஜனாதிபதி கல்லூரி)
வெளிப்பிரதேச மாணவ, மாணவிகளுக்காக விடுதி வசதிகளும் செய்து தரப்படும். அத்தோடு, இந்த வருடம் முதல் தொழிநுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் நடைபெறுவதுடன் இலங்கையின் தலை சிறந்த ஆசிரியர்களால் மேலதிக நேரவகுப்புக்களும் நடாத்தப்படும்
மேலதிக விபரங்களுக்கு எம்.எஸ்.எம். ஸபான் -
0773456016 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்..
0 comments:
Post a Comment