பஸ்களை
குறி வைத்து நடத்தப்பட்ட
வெடி குண்டு
தாக்குதலில்
68
குழந்தைகள் உட்பட126 பேர் பலி
சிரியாவின் அலெப்போ நகர் அருகே பஸ்களை குறி வைத்து
நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 68 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலி
எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும்,
கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையேயான உள்நாட்டுப்போர், 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ
நகரை முழுமையாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும்
சண்டையில் ஈடுபட்டுள்ளனர். போரினால் அங்கிருந்து 80 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்து
விட்டனர்.
இந்நிலையில், அலெப்போ நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில்
ஈடுபட்டிருந்த பஸ்கள் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த
தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாக கண்காணிப்பு மையம் தெரிவித்து இருந்தது.
கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள ரஷிதீன் என்ற பகுதியில் இந்த
தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இதேபகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்
அலெப்போ நகரில் இருந்து பஸ்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில்,
அலெப்போ நகர் அருகே பஸ்களை
குறி வைத்து நடத்தப்பட்ட இந்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 68 பேர் குழந்தைகள் ஆவர்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் இட்லிப் மாகாணத்தின்
அல்-பவுயா மற்றும் கெப்ரயா கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
0 comments:
Post a Comment