மீதொட்டமுல்ல குப்பை மேடு  சரிவடைந்ததன் காரணமாக

இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு

மீதொட்டமுல்ல குப்பை மலை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில், குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபா 100,000 (ஒரு இலட்சம்) இழப்பீடும், சொத்துக்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு 2.5 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
குறித்த அனர்த்தத்தை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிதியமைச்சினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 இவ்வரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், 2016 ஆம் ஆண்டு, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்படும் உயிர்கள் மற்றும் சொத்து இழப்புகளுக்கு, இழப்பீடுகளை வழங்குவதற்கான முன்னோடி நடவடிக்கையாக, தேசிய அறக்கட்டளை மானிய நிதியம் ஊடாக, முழு நாடும் உள்ளடங்கும் வகையிலான காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அனர்த்தங்களில் பாதிக்கப்படுவோருக்கு மிக இலகுவாக இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தை அடுத்து, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்காக, திறைசேரியிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஆபத்தை எதிர்நோக்கியுள்ள வீடுகளை, மீண்டும் நிர்மாணிப்பதற்கு அல்லது வேறு இடங்களில் வசிப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 முழுமையாக அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக, அவ்வீட்டு உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அமைவாக, கொழும்பு நகரில் நடைமுறையிலுள்ள தொடர் மாடி திட்ட வீடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
 என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 28 பேர் உயிரிழந்துள்துடன் 30 பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top