மூன்று ஆண்டுகள் இருக்கும் போதே

பிரித்தானியாவில் நாடாளுமன்றம் கலைப்பு?

ஜூன் மாதம் 8ஆம் திகதி  தேர்தல்

Britain to go to the polls in just seven weeks as Theresa May stuns Westminster by calling a snap General Election to provide the 'strong and stable leadership' to deliver Brexit


  • Prime Minster announced she wants an election to ensure 'strong leadership' in the Brexit negotiations ahead
  • May must win a vote in the Commons tomorrow night but this is a formality as Corbyn has said he will back it   
  • The PM made the announcement of a June 8 poll after a Cabinet meeting of her top ministers in No 10 today
  • Corbyn said Labour would offer the country an 'effective alternative' that was a 'credible choice' for Britain 
  • SNP leader Nicola Sturgeon accused May of consulting the polls and putting party ahead of her country
  • Ex PM David Cameron hailed May's surprise decision to call a general election as the 'brave and right' one 

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் இன்று வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள பாராளுமன்றில் பதிவிகாலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து கடந்த ஆண்டு இடம்பெற்ற பொது மக்கள் வாக்கெடுப்பில் 52 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசின் நிச்சயத்தன்மை காணப்படவேண்டும் என தெரேச மே குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதனை முடக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் நடத்துவது குறித்த மசோதா நாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், அதனை எதிர்க்கட்சி ஆதரிக்க வேண்டும் எனவும் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top