கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின்
தற்காலிக அதிபர் தனது சொந்த அலுவலகத்தில் கடமையேற்றார்
(அஸ்லம்)
கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலையில் தற்காலிக அதிபராகக் கடமையாற்றிய உதவிக்கல்விப்
பணிப்பாளர். பீ.எம்.எம்.பதுர்தீன்
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சின் உத்தரவிற்கமைய
தனது நிரந்தர
சேவை நிலையமான
கல்முனை வலயக்கல்வி
அலுவலகத்தில் நேற்று (03.04.2017) மீண்டும்
கடமைக்கு அறிக்கை
செய்துள்ளார்.
சுமார்
02 மாதகாலமாக அவரது மாத சம்பளம் கல்முனை
வலயக்கல்வி அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் மீண்டும்
அறிக்கையிட்டால் மாத்திரமே அவரது சம்பளத்தை வழங்குமாறு
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சு உத்தரவிட்டிருந்தது..
இவரை
31.03.2017 வரை குறித்த பாடசாலையில் கடமையாற்ற அனுமதி
வழங்குமாறு கல்லூரியின் பழைய மாணவர் சங்கச்
செயலாளரும், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளரும் அவகாசம்
கோரியிருந்தனர். இவரது நியமனம் தொடர்பாக இலங்கை
மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் இவர்
01.01.2017ம் திகதி கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில்
கடமைக்கு அறிக்கை
செய்திருக்க வேண்டும்.
இதற்கிடையே
இப்பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட்
என்பவர் தான்
அப்பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபராக இருக்கையில்
தேசிய பாடசாலை
சேவையில் இல்லாத
மாகாண சேவைக்குரிய
ஒருவரை இப்பாடசாலையின்
தற்காலிக அதிபராக
நியமித்ததன் மூலம் தமது அடிப்படை உரிமை
மீறப்பட்டதாகத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment