பெருமிதத்திற்கு முன்னால்
தோற்றுப்போன மனிதாபிமானம்
(அஸ்லம்)
சம்மாந்துறை
முஸ்லிம் தேசிய
பாடசாலையின் முன்னாள் அதிபரும், சம்மாந்துறை வலயக்கல்வி
அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகக்
கடமையாற்றியவருமான ஜனாப். எச்.எம்.பாருக்
அவர்களின் மனைவியான
ஆசிரியை திருமதி.
கே.எம்.பாருக் நேற்று
(03.04.2017) காலை காலமானார்.
இதன்
காரணமாக சம்மாந்துறை
முஸ்லிம் தேசிய பாடசாலையில் கற்பிக்கும்
ஆசிரியர்களும், ஆசிரியைகளும், மாணவர்களும் அவரது ஜனாஸாவைப்
பார்ப்பதற்காகச் செல்லவிருந்த போது அப்பாடசாலையில் அண்மையில்
வெளியான க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின்
09 ஏ சித்திபெற்ற
14 மாணவர்களைப் பாராட்டும் விசேட காலைக்கூட்டத்திற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலந்துகொண்டமையினால்
அவரது ஜனாஸாவைப்
பார்வையிட செல்ல
முடியாத ஒரு
சூழ்நிலை உருவானது.
முன்னாள்
அதிபரின் மனைவியின்
ஜனாஸாவுக்கு செல்ல வேண்டுமெனவும், இன்றைய வைபவத்தை
பிறிதொரு தினத்திற்கு
வைக்குமாறு நிருவாகத்திற்குக் கூறியபோதும்
அதனை பொருட்படுத்தாத
நிருவாகமும், வலயக்கல்விப் பணிப்பாளரும் விடாப்பிடியாக வைபபவத்தை
நடாத்தி முடிப்பதில்
கவனமாக இருந்ததாக
மாணவர்களும், ஆசிரியரும் கவலை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை
தேசிய பாடசாலை
மாணவர்களின் பரீட்சை பெறுபேற்றை தன்னுடைய பெறுபேறென
பறைசாற்றும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரின் பெருமிதத்திற்கு
முன்னால் மனிதாபிமானம்
தோல்வி கண்டுவிட்டதாக
ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சுமார்
08 வருடங்கள் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அதிபராக
இருந்தவரின் அன்புக்குரிய மனைவியின் ஜனாஸாவுக்கு செல்ல
முடியாதது அப்பாடசாலை
ஆசிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாவும் கூறப்படுகின்றது.
பெருமிதத்திற்கு
முன்னால் மனிதாபிமானம்
தோற்றுப்போய்விட்டதாக
மானிடப்பண்புள்ளவர்கள் இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment