துறைசார் அமைச்சர்களை அழைத்துவராமையே
அம்பாறை கரையோரப் பிரதேசம்
அபிவிருத்தியில் பின்னடைவுக்கு காரணம்
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு அபிவிருத்தி வேலைகளை
ஆரம்பிப்பதற்கும், கட்டங்களை திறந்து கையளிப்பதற்கும் அந்தந்த துறைசார் அமைச்சர்களை அழைத்து வருவதற்கு எமது அரசியல்வாதிகள் தயக்கம் காட்டுவதே இப்பிரதேசங்கள்
அபிவிருத்தியில் பின்னடைந்திருப்பதற்கு பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையிலும் சனிக்கிழமை பொத்துவிலிலும் பல கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஆனால் இத்திறப்பு விழாக்களுக்கு துறைசார் அமைச்சர்கள் எவரும் அழைக்கப்படவில்லை.
பாடசாலைகளில் கட்டடங்கள் திறப்பட வேண்டியிருந்தால் இச்சந்தர்ப்பத்தை பாவித்து கல்வி அமைச்சரை இப் பிரதேசத்திற்கு அழைத்து வந்து அவர் மூலமாக அடிக்கற்களை நட்டியும் கட்டடங்க்களைத் திறக்க வைத்தும் அவரை கெளரவித்து இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு மேலும் பல உதவிகளை அவரிடம் பெற்றுக்கொண்டிருக்க முடியும். அதுமாத்தியரமல்லாமல் இப்பிரதேசங்களிலுள்ள
குறைபாடுகளை அமைச்சருக்கு பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக எத்திவைக்கவும் சந்தர்ப்பம்
ஏற்படும் இதற்கு எமது அரசியல்வாதிகள் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக இல்லை என
மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது..
இதுபோன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களை கல்முனை,பொத்துவில் பிரதேசத்திற்கு அழைத்து அவரைக் கெளரவித்து அவர் மூலமாக அடிக்கற்களை நட்டியும் கட்டடங்க்களைத் திறக்க வைத்தும் இப்பிரதேச வைத்தியசாலைகளுக்கு மேலும் உதவிகளை அவரிடம் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.
ஆனால், துறைசார் அமைச்சர்களை அழைத்து வந்து அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைப்பதையும் கட்டங்களைத் தீரந்து வைப்பதையும் எமது அரசியல்வாதிகள் விருபுகின்றார்கள் இல்லை.
இவர்கள் மக்களிடம் எல்லாவற்றையும் நாங்களே செய்ய வேண்டும் எனக் கருதி செயல்படுவதன் காரணமாகவே அம்பாறை கரையோர பிரதேசம் குறிப்பாக கல்முனைப் பிரதேசம் அபிவிருத்தி காணாத நிலையில் இருப்பதற்கு பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பதவிக் காலத்திற்கு பின்னர் இப்பிரதேசங்களில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதோ பாருங்கள்.........!
வடக்கில் சுகாதார சேவை தொடர்பான அபிவிருத்தி……!!
சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இன்றும் நாளை மறுதினமும் வடக்கிற்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
வடக்கில் சுகாதார சேவை தொடர்பான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான தீர்மானத்திற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுகின்றது.
இந்த விஜயத்தின் போது மாமடுவ சிறுநீரக சிகிச்சை மத்திய நிலையம் , மன்னார் வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ தங்குமிட கட்டிடத் தொகுதி ஆகியனவற்றை திறந்து வைக்கவுள்ளார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் தொடர்பில் எதிர்நோக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை அடையாளம் காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் - வேலணை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு நிகழ்வு அமைச்சரின் தலைமையில் இடம்பெறும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள சுகாதாரப் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கான பேச்சுவார்த்தையிலும் அமைச்சர் கலந்து கொள்வார். அமைச்சர் தனது விஜயத்தின் போது அகில இலங்கை மருந்து விற்பனையாளர் சங்கத்தின் வடமாகாண கிளையின் பிரதிநிதிகளையும் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன சந்திக்கவுள்ளார்.
இப்படி அமைச்சர்கள் வடக்கு மாகாணத்திற்கு சென்று மக்களுக்குத் தேவையான
அபிவிருத்தி வேலைகளைச் செய்து கொடுக்கும் நிலையில் ஏன் கிழக்கு மாகாணத்தில்
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு துறைசார் அமைச்சர்கள்
விஜயம் செய்து அபிவிருத்தி வேலைகளைத் தொடங்கி வைக்காமலும் முடிக்கப்பட்ட வேலைகளை மக்களிடம் கையளிக்க
முன்வராமலும் இருப்பது ஏன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment