வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 254 பேர் பலி

கொலம்பியாவில் சம்பவம்

கொலம்பியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரையிலும் 254 பேர் பலியாகி உள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது, மழை தொடர்ந்து பெய்து வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், நள்ளிரவு ஆற்றின் கரைப்பகுதி உடைந்ததால் இந்த பேரழிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலாம்பியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக மோகா பகுதியில் நேற்று இரவு இரண்டு ஆறுகள் ஆற்றின் கரையை உடைத்துவிட்டு நகரத்திற்குள் புகுந்தது.
இதனால் இரவில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.
இதில் மரங்கள், வளர்ப்பு விலங்குகள், வீடுகள் மற்றும் கார்கள் போன்றவைகள் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளன. ஒரு சில கார்கள் வீட்டின் மேற்கூரையின் மீது நிற்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகையில், இச்சம்பவத்தால் தற்போது உள்ள நிலைமைவரை 254 பேர் வரை இறந்திருக்க கூடும் என்றும், 400க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள இச்சம்வத்தால், அந்நகர மக்கள் காணமல் போன தங்கள் உறவினர்களை கண்ணீர் விட்டு தேடி வருகின்றனர். இதனால் இரண்டு முக்கிய பாலங்கள் தரைமட்டமாகியுள்ளன.


மேலும் இச்சம்பவத்தால் ஏராளமான பாதுகாப்புபடை வீரங்கள் அங்கு விரைந்துள்ளனர்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top