தன்னை தொடாதே, நீ பாதுகாப்பு இல்லாதவள்
முஸ்லிம் பெண்ணுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமானம்
இத்தாலி விமான நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவரின் பர்தாவை கழற்றும்படி அங்கிருந்த பயணிகள் பரிசோதனையாளர் கூறியது தொடர்பான வீடியோவை அப்பெண் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனிஷியாவைச் சேர்ந்தவர் Aghnia Adzkia. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் இத்தாலியின் தலைநகரமான ரோம்மில் உள்ள Ciampino விமான நிலையத்தில் லண்டன் செல்வதற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது வழக்கம்போல் தங்களது கடமைகளை செய்யும் பயணிகள் பரிசோதனையாளர்கள் அப்பெண்ணை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அப்பெண் அணிந்திருந்த பர்தாவை கழற்றும் படி கூறியுள்ளனர். ஆனால் இவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
அப்பெண் அருகே வந்த ஒரு பணிபெண் தலைமுடிக்கு பின்னால் மர்மபொருட்கள் எதாவது மறைத்து வைத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு உண்டு அதனால், நீங்கள் உங்கள் பர்தாவை கழற்றினால் தான் எங்களால் பரிசோதனை செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். அதன் பின் அப்பெண் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அப்பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,
தான் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. தான் ஒரு சாதாரண முஸ்லிம் பெண் என்றும், தன்னை பரிசோதனை செய்யும் போது ஒரு பணிப்பெண் தன்னை தொடாதே, நீ பாதுகாப்பு இல்லாதவள், உன் தலைமுடிக்குள் என்ன இருக்கிறது, உள்ளே ஏதோ இருக்கிறது என்ன என்று கூறி தன்னை இழிவுப்படுத்திவிட்டதாகவும், மரியாதை கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தான் தன்னுடைய பர்தாவில் ஒன்றும் இல்லை என்று அவர்களிடம் நிரூபித்துவிட்டேன், தயவு செய்து விமான நிலைய அதிகாரிகளே முஸ்லிம் பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், அவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் கிடையாது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இதே வேளை இந்த சோதனையானது விமானங்களில் செய்யப்படும் வழக்கமான ஒன்று தான் என்று இந்தோனேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment