மீதொடமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததினால் 

பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான

அரசாங்கத்தின் விசேட திட்டம்



மீதொடமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததினால் ,பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதொடமுல்லை குப்பை மேட்டின் பகுதியொன்று சரிவுக்குள்ளானதால் மரணமடைந்த அனைவரினதும் இறுதி சடங்குகளை அரசின் முழுச் செலவில் நடத்துவதற்கும்இடருக்குள்ளான மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், சுகாதார வசதிகள் மற்றும் உடைமை பாதுகாப்பு உள்ளடங்களாக அனைத்து விதமான தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம்  அதிமேதகு ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோரின் விசேட அறிவுறுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு அருகாமையில் வசித்து வந்த 180 குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அகற்றி பொருத்தமான இடத்தில் குடியமர்த்துவதற்காக அரச தலையீட்டுடன் கொழும்பு மாநகர சபை ஒரு வீட்டிற்காக மாதமொன்றிற்கு 15,000.00 ரூபாய் படி ஆறு மாதங்கள் நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனினும், சில குடியிருப்பாளர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறுவதில் காட்டிய  தயக்கம் இந்த அனர்த்தத்திற்கு பிரதான காரணமாக உள்ளமை தெரியவந்துள்ளது.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அனர்த்தத்திற்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட குழு மூலமாக தேவையான நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து செயற்படுத்தப்படுவதோடு, இடர் முகாமைத்துவ அமைச்சு, சட்டம் ஒழுங்கு  மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, முப்படை வீரர்கள், விசேட படையினர், பொலீஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தற்பொழுது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இநத் நிவாரண சேவைக்கு  அருகாமையிலுள்ள மக்களின் பங்களிப்பு அவசியம்இதற்கு  பங்களிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என்றும்  மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top