மீசை, தாடியை பாதி மழித்து நாளுக்கு நாள் தீவிரமடையும்
இந்திய விவசாயிகளின் போராட்டம்
டெல்லியில் 21-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுபோன்று தினம் ஒரு நூதன போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
21 நாட்களாக டெல்லியில் பாதையிலேயே பகலில் போராடுவது, இரவில் தூங்குவது, சாப்பிடுவது என விவசாயிகள் படும் பாட்டை பார்த்து டெல்லி மக்கள் கண்கலங்கி வருகின்றனர்.
நடுரோட்டில் கொளுத்தும் வெயிலில் உடலில் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு பாம்புக்கறி, எலிக்கறி சாப்பிட்டு தங்கள் நிலையை அரசுக்கு உணர்த்துவது என்று போராடிய விவசாயிகளின் நிலையை பார்த்து மற்ற மாநில விவசாயிகளும் வந்து பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தலைமுடியை பாதி மொட்டையடித்துக் கொண்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று விவசாயிகள் பாதி மீசையையும், பாதி தாடியையும் மழித்துக் கொண்டு டெல்லி ரோட்டில் அமர்ந்து போராடியுள்ளனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுபோன்று தினம் ஒரு நூதன போராட்டத்தை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment