வைகோவுக்கு திடீர் சிறை!
சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேசத் துரோக வழக்கில், வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. தமிழக க்யூ பிரிவு பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு இந்த வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. அந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். முக்கியமாக, ஜாமீனில் செல்ல விரும்பில்லை என்று நீதிமன்றத்தில் வைகோ கூறியுள்ளார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர், புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment