தமிழகத்தில் ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து
நூதன தேர்தல் பிரசாரம்!
தமிழகத்தில் ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து நூதன தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது
தமிழகத்தில் ஆர்.கே.நகரில் எதிர் வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் அங்கு சூடுபிடித்துள்ளது.
தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம், ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே, ஒரு மாதிரி சவப்பெட்டியை பொருத்தி அதில் ஜெயலலிதா பொம்மையை செய்து வைத்து, அவர் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.
ஏற்கெனவே, ஓ.பி.எஸ் அணியினர் 'ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக' கூறிவரும் நிலையில், இன்று இந்நிலையில் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment