சைட்டம் கல்லூரிக்கு எதிரானவர்களை
சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்!
மாலம்பே
தனியார் மருத்துவ
கல்லூரிக்கு எதிரானவர்களை சிரியாவிற்கும்,
லிபியாவிற்கும் அனுப்பி வைக்க வேண்டுமென மருத்துவ
கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பெர்னாண்டோ
தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர்
நெவில் பெர்னாண்டோ மேலும் கூறுகையில்,
மாலம்பே
தனியார் மருத்துவ
கல்லூரியை அரசாங்கம்
பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென சிலர்
போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறானவர்கள்
நாட்டின் சட்ட
திட்டங்களுக்கு மதிப்பளிப்பதில்லை, எனவே அவர்களை சிரியா,
லிபியா போன்ற
நாடுகளுக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
நாட்டின்
அப்பாவி மாணவர்களுக்காக
மாலம்பே தனியார்
மருத்துவ கல்லூரி
1600 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டது.இதற்காக வங்கிக் கடன் கூட
பெற்றுக்கொள்ளப்பட்டது.
மாலம்பே
தனியார் மருத்துவ
கல்லூரிக்கு எதிரானவர்கள் பொறாமை காரணமாக இவ்வாறு
கூச்சலிடுகின்றனர்.இவர்கள் சொல்லும்
தாளத்திற்கு ஆட்டம் போட எவரும் தயாரில்லை.இவர்கள் ஏன்
இவ்வளவு துள்ளுகின்றார்கள்
என்பது அனைவருக்கும்
தெரியும்.
நாட்டின்
சட்ட திட்டங்களுக்கு
மதிப்பளிக்காத இவர்கள், இந்த சமூகத்திற்கு என்ன
செய்துள்ளார்கள்?.இந்த நாட்டில் அரசாங்கமொன்று உண்டு
என்பதனை அவர்கள்
புரிந்து கொள்ள
வேண்டும்.
நாட்டில்
சட்டமொன்று உண்டு என்பதனையும் தெரிந்து கொள்ள
வேண்டும்.இவ்வாறு
கூச்சலிடும் தரப்பினரின் சொத்து விபரங்கள் குறித்து
விசாரணை நடத்தினால்
என்ன என்ன
விடயங்கள் அம்பலமாகுமோ
தெரியாது. இவ்வாறு டாக்டர் நெவில்
பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment