பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்
சீரான திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை
பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையோடு சீரான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சங்கத்தின் சிரேஷ்ட உப செயலாளர் அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை பிரதமர் அங்கீகரித்துள்ளதாகவும், அதற்கு அமைச்சரவையின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் சியம்பளாபிட்டிய குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதன் போது ஒவ்வொரு துறைகளிலும் பொருத்தமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment