கொலன்னாவ, மீட்டொத்தமுல்லை சம்பவம்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

தொடரும் மீட்புப் பணி

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் இதுவரை மரணித்தவர்கள் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
இதில் நான்கு பேர் சிறுவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் குப்பை மேட்டு சரிவினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த அனர்த்தத்தில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்தத்தில் முன்னதாக சிறார்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் மூன்று சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட சடலங்களில் மூன்று சிறுவர்கள், ஒரு பெண், இரண்டு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சடலங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள.
இதேவேளை குப்பை மேடு இடிந்துவிழுந்ததில் எத்தனை பேர் அதில் மாட்டிக்கொண்டனர் என்னும் தகவல் வெளியாகவில்லை.
மேலும், இச் சம்பவத்தினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

குப்பை மேட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.



















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top