மீதொடமுல்லை குப்பை மேடு
இடிந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதம்
கொலன்னாவை,
மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி
இடிந்து விழுந்ததால்
சுமார் 40 வீடுகள்
சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று
பிற்பகல் 3 மணியளவில் குப்பை மேட்டின் ஒரு
பகுதி இடிந்து
விழ ஆரம்பித்ததாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ
இடத்துக்கு தீயணைப்பு படையினரின் 6 தீயணைப்பு வாகனங்கள்
அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு
சேவை திணைக்களம்
தெரிவித்துள்ளது.
கொலன்னாவை,
மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி
இடிந்து விழுந்ததால்
ஏற்பட்ட விபத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,
குறித்த இடத்துக்கு
இராணுவத்தினர் 100 பேர் நிவாரணப்
பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு
நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறித்த
பகுதிக்கு மக்கள்
செல்வதை தவிர்ந்து
கொள்ளுமாறு அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கொலன்னாவை,
மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி
இடிந்து விழுந்ததால்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிக
விரைவாக நிவாரணம்
வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்த
முகாமைத்துவ அமைச்சர், முப்படைகளின் தளபதிகள் மற்றும்
பொலிஸ்மா அதிபர்
ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு
பணிப்புரை விடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment