பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலய மாணவர்களின்

கல்வி முன்னேற்றத்துக்கு

 கல்வி சமூகம் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது

பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ஹக்கீம்

கம்பஹா மாவட்டத்திலுள்ள 20 முஸ்லிம் பாடசாலைகளில் பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயம் நல்லதொரு முன்னேற்ற தரத்தில் காணப்படுகிறது. கல்வி முன்னேற்றத்துக்காக பகுதி நேர வகுப்புகளையும் ஊக்குவிப்புகளையும் இங்குள்ள கல்வி சமூகம் முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாம்புளுவ, பசியாலை பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் இன்று 6 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனது தந்தை பாடசாலைக்கு அதிபராக இருந்த விவசாயக் கிராமங்களில், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளை அவர் வயலுக்கு சென்று அடித்து விரட்டி பாடசாலையில் சேர்த்துவிட்டதாக அவரிடம் கற்ற மாணவர்கள் இன்றும் பெருமையாக சொல்கின்றனர். இதுபோல, பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் விடயத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

பாடசாலை அதிபர் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாணசபை உறுப்பினர் ஷாபி றஹீம், வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top