நவீனமயப்படுத்தப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய
ஓடுபாதை இன்று திறப்பு
விமான சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஓடு பாதையினை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் திறந்து வைத்தனர்.
50 மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்ட குறித்த பணிகளுக்காக கடந்த மூன்று மாதங்களாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
புதிய ஓடுபாதையில் ஏ-380 ரகத்தைச் சேர்ந்த பாரிய அளவிலான விமானங்களை தரையிறக்கக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும்.
தற்போது விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
0 comments:
Post a Comment