முஸ்லிம் காங்கிரஸ், பொத்துவில் கூட்டத்தில் கல்வீச்சு
பொத்துவில் பிரதேசத்தின் குறைகள் தீர்க்கப்படும் என்பதே
தலைவர் ஹக்கீம் அவர்களின் பேச்சு
பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்
அப்பிரதேச மக்களின் இதுவரை நிறைவேற்றப்படாத பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி
வலயத்தை உருவாக்குதல், குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, பொத்துவில் வைத்தியசாலையை
தரமுயர்த்துவது, காணிப் பிரச்சைனைகளுக்கு முடிவு காண்பது என்பவைகளுக்கு தீர்வு காண்போம்
என்று மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பேச்சாகாகவே அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வழங்கள் அமைச்சராக இருக்கும் நான் பொத்துவில் பிரதேசத்திற்கான
குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எப்படி பொத்துவில் பிரதேச மக்களின் முகத்தில்
முழிப்பது, அடுத்த ஒரு தேர்தலில் எவ்வாறு என்னால் இம்மக்களிடம் முகம் கொடுக்க முடியும்
என்றவாறு அப்பேச்சு அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டம் ஆரம்பித்து பல மணி நேரத்தின் பின்னர், இரவு சுமார்
9.40 மணியளவிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மேடையேறும்போது வழமையாக ஒலிக்கும்
“ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்” பாடல், பொத்துவில்
மேடையில் ஒலிக்க விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக
பொதுக் கூட்ட
மேடைகளில் மணித்தியாலக்
கணக்கில் பேசும்
முஸ்லிம் காங்கிரஸ். தலைவர் ஹக்கீம்,
பொத்துவில் கூட்டத்தில் மிகக் குறுகிய நேரத்தில்
பேசி விட்டு,
அவசரமாகச் சென்றார்.
முன்னதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளும் இந்தக்
கூட்டத்தினை பகிஸ்கரிக்குமாறு, ‘பொத்துவில் உலமா சபை’ எனும் பெயரில் துண்டுப் பிரசுரமொன்றும் வெளியாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இக்கூட்டத்தில் பொது மக்கள் சிலரால் கல்வீச்சு நடத்தப்பட்டு கலகம் உண்டுபண்ணியதை அடுத்து
கூட்டத்தில் பேசவிருந்த பலரை பேசுவதற்கு நேரம் வழங்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் அவர்களை நேர காலத்துடன் பேசுவதற்கு இடமளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இப் பொதுக்
கூட்ட மேடை
மீது, சிலர் கல்
வீச்சுத் தாக்குதல்
நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த
நிலையில், மேடையில்
பேசிக் கொண்டிருந்த
சிலர்; “கற்களை
வீசுவதென்றால் வீசுங்கள், ஆனால் நாங்கள் கூறுவதைக்
கேட்டு விட்டு,
பிறகு கற்களை
வீசுங்கள்” என்று ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்ட
போதும், கல்
வீச்சு தொடர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
முஸ்லிம்
காங்கிரஸின் பொத்துவில் கூட்டத்தைக்
குழப்ப முயற்சித்தவர்கள்
எனும் குற்றச்சாட்டில்,
சிலரை பொலிஸார்
கைது செய்துள்ளதாகவும்
அறிய முடிகிறது.
“கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள், கல்லெறிய
வேண்டாம்” என்று,
மேடைப் பேச்சாளர்கள் ஒலி பெருக்கியில்
வேண்டுகோள்விடுத்த போதும், கல்வீச்சு தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment