பெண் பணியாளர்களின்
கூந்தலை வெட்டி எறிந்த அதிகாரி
நைஜீரியாவில் பெண் பணியாளரின் தலைமுடி கூந்தலை வெட்டியெறிந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் உள்ள மத்திய சாலை பாதுகாப்பு நிறுவனத்தில் கமாண்டராக பணியாற்றி வருபவர் ஆண்ட்ரூ குமாபயீ.
இவர் இரு தினங்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண் அரசின் விதிகளை மீறி சிகையலங்காரம் வைத்துள்ளதை பார்த்துள்ளார்.
இந்த விதிமீறலுக்கு தண்டனை தரும் விதமாக அப்பெண்ணின் தலை முடி கூந்தலை அவர் வெட்டியுள்ளார். இதை அருகிலிருந்தவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த செயலை செய்த ஆண்ட்ரூ மீது சாலை பாதுகாப்பு நிறுவனம் ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இதனிடையில், நைஜீரியா தலைவர் முகமது புஹாரியின் நெருங்கிய தொடர்பில் உள்ள லரெட்டா ஓனெக்கி இது பெண்ணை அவமானம் செய்யும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment