அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மரணம்

இவரின் மரணம் கொலையா? தற்கொலையா?

The First Woman Muslim Judge In The US Has Been Found Dead In A New York River

அமெரிக்க வரலாற்றில் முதன் முதலாக நீதிபதி பதவி வகித்த முஸ்லிம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க-அமெரிக்கா பின்னணி கொண்ட Sheila Abdus-Salaam(65) என்பவர் நியூயோர்க் நகரில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
சட்டம் பயின்ற இவர் கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் இவர் நேர்மையாகவும் உண்மையாகவும் தீர்ப்புகளை வழங்கி நற்பெயரை பெற்றவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் Hudson ஏரியில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை தண்ணீரை விட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.
பின்னர், உயிரிழந்துள்ளது பெண் நீதிபதி என தெரியவந்துள்ளது. இதனை நீதிபதியின் உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
உடலில் ஆடைகள் முழுவதுமாக இருந்துள்ளது. மேலும், காயங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை.
சடலத்தை மீட்ட பொலிஸார் அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு தான் இது கொலையா? அல்லது தற்கொலையா எனத் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top