கல் மனிதன் என்று ஒதுக்கிய சிறுவனுக்கு
இன்று ஏற்பட்டுள்ள நிலை?
வங்கதேசத்தை
சேர்ந்த 8 வயது
சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை தோல்
நோய் தற்போது
மெல்ல மெல்ல
குணமடைந்து வருவதாக
அறிவிக்கப்படுகிறது.
வங்கதேசத்தைச்
சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய
வகை தோல்வியாதி
ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சிறுவனின்
உடல்களில் உள்ள
தோல்களில் தடித்த
செதில் போன்றும்,
மணல்களில் இருக்கும்
கற்களை போன்றும் காணப்பட்டது.
இதனால்
அவனை கிராமமக்கள்
உட்பட பலரும்
நிராகரித்தனர். மேலும் Mehendi Hassan னின்
பெற்றோர் சிகிச்சைக்காக
யாரேனும் உதவினால்
நன்றாக இருக்கும்
என்றும் அரசாங்கமும்
உதவ முன்வர
வேண்டும் என்று
கேட்டிருந்தனர்.
இந்த
நோயை குணப்படுத்துவது
கடினம் எனவும்
கூறியிருந்தனர். இந்நிலையில் அச்சிறுவனின் உடலில் தென்பட்ட
தடித்த செதில்
போன்ற அமைப்பு
தற்போது மெல்ல
மெல்ல குணமடையத் தொடங்கியிருப்பதாக
அறிவிக்கப்படுகிறது.
குணமடைவதற்கான
வாய்ப்பு மிகவும்
குறைவு என்று
கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன்
குணமடைந்து வருவது ஒரு வியப்பூட்டும் செயல்
தான் என்று
கூறப்படுகிறது.
இது
குறித்து சிறுவனின்
தாயார் கூறுகையில்,
தன் மகனின்
நிலையை அறிந்த
ஒரு தொண்டு
நிறுவனம், உதவ
முன்வந்தது.
அதன்
பின் கடந்த
ஒரு மாதம்
எடுத்த சிகிச்சை
முறைகளால் அவன்
தன் கைகளாலே
சாப்பிடுகிறான், பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்று
மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தன் மகனின்
நிலை செய்தியாக
வெளியானதால், அதை அறிந்து பலரும் தன்
மகனின் சிகிச்சைக்காக
உதவினர்.
அவர்கள்
உதவிகள் இல்லையெனில்
தன் மகன்
இந்த நிலைமைக்கு
வந்திருக்கமாட்டான் எனவும், மகன்
தற்போது குணமடைந்து
வருவதால், அன்று
பயந்த மக்கள்
தற்போது தன்
மகனுடன் சகஜமாக
பழகுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இது
குறித்து மருத்துவர்
ஒருவர் கூறுகையில்,
இதே போன்று
சிகிச்சை முறையை
Mehendi Hassan தொடர்ந்து எடுத்து வர
வேண்டும் என்றும்
குறைந்த பட்சம்
நான்கு வருடங்களாவது
தொடர்ந்து எடுத்து
வர வேண்டு
என்று கூறியுள்ளார்.
இவ்வாறு
தொடர்ந்து சிகிச்சை
எடுத்து வரும்
போது ஒரு
நாள் கண்டிப்பாக
இந்த நோய்
குணமடையும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment