ஏலம் விடப்பட்ட
ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்:
எவ்வளவுக்கு
விற்றது தெரியுமா?
"இந்த
நூற்றாண்டின் சிறந்த மனிதர்" எனும் பட்டம் பெற்ற கணித மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்
கடிதம் ஒன்று 53503 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அறிவியல்
அறிஞர் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் எழுதிய
கடிதம், அமெரிக்காவில்
ஏலம் விடப்பட்டுள்ளது.
அறிவியல்
அறிஞர் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனை கற்றோர்கள்
மத்தியில் தெரியாதவர்கள்
யாரும் இல்லை
என்று தான்
கூற வேண்டும்.
அவரிடம் கடந்த
1953ஆம் ஆண்டு,
அறிவியல் ஆசிரியர்
ஆர்தர் கன்வெர்ஸ்
கேள்வி ஒன்றை
கேட்டிருந்தார். அது மின்னியல் கோட்பாடு மற்றும்
சிறப்பு சார்பியல்
குறித்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஐன்ஸ்டீன்
கடிதம் ஒன்றை
எழுதினார். 64 ஆண்டுகளாக பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த
கடிதம், நேற்று
ஏலம் விடப்பட்டது.
அந்த நிகழ்வு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள
நேட் டி
சாண்டர்ஸ் ஏல
நிறுவனத்தில் நடைபெற்றது.
ஏராளமானோர்
ஆர்வத்துடன் ஏலத்தில் பங்கேற்றனர்.. ஏலம் எடுத்தவர்
குறித்த தகவல்கள்
ஏதும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏல நிறுவனத்தின்
உரிமையாளர் நேட், அறிவியல் சார்ந்த எந்த
ஒரு கேள்விக்கும்
மிகவும் தெளிவாகவும்,
சரியாகவும் ஐன்ஸ்டீன் விளக்கம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
அதன்மூலம் அக்கால
அறிவியல் அறிஞர்கள்
மத்தியில் அவருக்கு
நன்மதிப்பு இருந்தது புலப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக்
கடிதம் 64 ஆண்டுகளாக
அந்த ஆசிரியரிடம்
இருந்துள்ளது. பின்னர் அது கலிபோர்னியாவில் உள்ள
நாட் சான்டர்ஸ்
ஏல விற்பனை
நிறுவனம் மூலம்
ஏலம் விடப்பட்டுள்ளது.
இதன்போது
குறித்த கடிதம்
53503 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment