மஹிந்த தலைமையில் புத்தாண்டு நிகழ்ச்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தென் மாகாணத்தில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்த புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளுக்கு பிரபலமான பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.
இதனடிப்படையில்,
மண் பாணை உடைத்தல் என்பதற்கு பதிலாக மத்திய வங்கியை உடைத்தல் எனவும், பலூன் ஊதி வெடிக்கும் போட்டிக்கு கூகுள் வைபை பலூன் எனவும், யானைக்கு கண் வைத்தல் என்ற போட்டிக்கு தங்க குதிரைக்கு கண் வைத்தல் எனவும், கயிறு இழுத்தல் போட்டிக்கு இரண்டு ஆளும் கட்சிகள் எனவும் பெயரிடப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment