கோர விபத்தில் கணவன் பலி
பரபரப்பு செய்தியாக தொலைக்காட்சியில் வாசித்த மனைவி
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பெண் அறிவிப்பாளரின் செய்தி வாசிப்பு முறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநில தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர், தனது கணவர் வீதி விபத்தில் உயிரிழந்ததைப் பிரேக்கிங் செய்தியாக வாசித்துள்ளார்.
28 வயதான சுப்ரீத் கவுர் என்ற பெண்ணொருவர் இவ்வாறு செய்தி வாசித்தது பலரின் மனங்களை உருகச் செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சுப்ரீத் கவுர் வழமை போன்று நேற்று செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நிருபர் ஒருவர் தொலைபேசியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனை செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது சுப்ரீத் கவுர் அந்த செய்தியையும் வாசித்தார்.
ஆனால் அந்த வாகனத்தில் சுப்ரீத் கவுரின் கணவர் ஹர்ஷாத் கவடேயும் பயணித்தார் என்ற செய்தியையும் அவர் அறிந்திருந்தார்.
எனினும் அதனை செய்தி வாசிக்கும் போது காட்டிக் கொள்ளாமல் செய்திநேரம் முடிந்ததும் ஸ்டுடியோவை விட்டு வெளியில் வந்து கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "விபத்துக்குள்ளானது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார்.
அந்த செய்தியை வாசித்துவிட்டு வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது.
கவுர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment