மீதொட்டமுல்ல
குப்பை மேட்டு அனர்த்தத்தில்
பதிவாகிய மனிதாபிமானம்!
கடந்த
சில தினங்களுக்கு
முன்னர் மீதொட்டமுல்ல
குப்பை மேடு
சரிந்து வீழ்ந்தமையால்
ஏற்பட்ட அனர்த்தம்
இலங்கை மக்களை
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீட்பு
நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள உண்மை
நிலவரங்களை அறிந்து கொள்ளவும் ஊடகவியலாளர்கள் அங்கு
குழுமியுள்ளனர்.
இந்நிலையில்
அனர்த்தம் இடம்பெற்ற
பகுதியில் நிகழ்ந்த
மனிதாபிமான செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில்
செய்தி வெளியாகி
உள்ளன.
அனர்த்த
நிலைமையிலும் பூனை ஒன்றின் உயிரை காப்பாற்ற
ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி பரவலாக
பேசப்பட்டு வருகிறது.
மீதொட்டமுல்ல
குப்பை மேட்டினை
புகைப்படம் எடுப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரின்
செயற்பாடே இவ்வாறு
கமராவில் பதிவாகியுள்ளது.
ஆங்கில
ஊடகமொன்றில் பணியாற்றும் வருண வன்னிஆராச்சி என்ற
ஊடகவியலாளரின் இந்த செயல் பல்வேறு தரப்பினர்களால்
பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment