இளைஞராக இருக்க அமெரிக்கா சென்று
ஊசி போடும் மஹிந்த
எப்போதும் இளைஞராக இருக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு சென்று ஊசி மருந்து ஏற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தனது நலனுக்காக மஹிந்த ராஜபக்ஸ மக்களின் வரிப்பணத்தில் அமெரிக்காவிற்கு சென்று வருகின்றார். இதை பொய் என மஹிந்தவால் நிரூபித்துக் காட்ட முடியுமா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்ப நலன் கருதி தன்னை பிரபலமாக மாற்றிக்கொள்வதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றார் என எதிரணியினரால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இதில் அவர்கள் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும் கடந்த ஆட்சியில் இருந்தவர்களே தமது குடும்பத்தின் நலனுக்காக மக்களின் வரிப்பணத்தினை பெற்றுக்கொண்டு அதில் சுகபோக வாழ்க்கையினை வாழ்ந்து வந்தவர்கள் தற்போதும்
இவ்வாறு தற்போதைய ஜனாதிபதி செய்யவில்லை, மாறாக அவர் தனது செலவீனங்களை குறைத்துள்ளார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு சென்று மக்களின் வரிப்பணத்தில் இளமையாக இருப்பதற்காக ஆண்டுதோறும் பல மில்லியன் பெறுமதியான ஊசியை ஏற்றி வருகின்றார். அத்துடன், அதனை பெற்றுக்கொள்வதற்காகவே சிங்கப்பூருக்கு சென்று வருகின்றார்.
அத்துடன் முன்னாள் பிரதமருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட போது உடனடியாக அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சைகளை வழங்கினார்கள்,
ஏன் என்றால் அவர் இறக்கும் பட்சத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவி சென்றுவிடும் என்பற்காகவே இவற்றினை மஹிந்த செய்தார்.
இவை அனைத்தும் பொய் என்றால் ஊடகங்களுக்கு முன்னாள் மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக தெரிவிக்கட்டும் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment