மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம்
எஜமானுக்காக பல நாட்கள் காத்திருக்கும் நாய்!
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை 33 உயிர்கள் பலியாகி உள்ளன. மேலும் 50 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் புதைந்த வீட்டின் மீது 14ஆம் திகதி முதல் இன்று வரை அமர்ந்திருக்கும் நாய் ஒன்றின் புகைப்படமே இவ்வாறு வெளியாகியுள்ளது.
தனது எஜமானை காணாமல் இந்த நாய் தவித்து வருகிறது. பல நாட்களாக உணவு, நீரின்றி இந்த நாய் அங்கு அமர்ந்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தனது எஜமான் உயிரோடு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த நாய் காத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment