அஸாத் சாலி மவுனாமாக இருப்பதே

அவர்  சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய சேவை

இபாஸ் நபுஹான்



அஸாத் சாலி ஊடக கண்காட்சிகள் நடத்துவதை  நிறுத்திவிட்டு முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடர்பில்  அவருடைய ஜனாதிபதியிடம் பேசி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும் என பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்...
இன்று நாட்டில் என்றுமில்லாத அளவு இனவாதம் தலை தூக்கியுள்ளது.ஒவ்வொரு நாளும் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இடம்பெறுகின்றன.
அன்று எதிர்கட்சியில் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிய அஸாத் சாலி போன்றவர்கள் இன்றும் அதே செயலைத்தான் செய்து கொண்டுள்ளார்.
பிரச்சினைகளை ஊதிப்பெரிதாக்குவதில் குறியாக இருக்கும் அஸாத் சாலி  பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் கவணம் எடுப்பதில்லை.ஜனாதிபதி இனவாதிகளுக்கு சோரம் போய்விட்டதாக ஒரு புறம் ஊடகங்களில் ஏசிப் பேசி திரிந்துகொண்டு மறுபுறம் அவரிடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டு அவற்றைஅனுபவித்தும் வருகிறார்.

மைத்திரி வழங்கிய சலுகைகள் குறைந்த சென்ற சந்தர்ப்பங்களில் ஜெனிவாவுக்கு பைல்களை தூக்கிச் சென்ற இவர் மீண்டும் சலுகை கிடைக்க துவங்கிய பின்னர் தற்போது மீண்டும் ஜனாதிபதிக்கு கூஜா தூக்க ஆரம்பித்துள்ளார்.
வாராவாரம் ஊடக கண்காட்சிகளை நடத்தி தனக்கு எதிரான கருத்துடையவர்களுக்கு தூற்றுவதை தவிரஉறுப்படியாக எதையும் அசாத் சாலி செய்யவில்லை.இவரின் பேச்சுக்கள் எமது சமூகத்தை பிற சமூகங்களின் மத்தியில் வெட்கித் தலைகுணிய வைத்துள்ளது. சிங்களவர்களில் ஒரு ஞானசார தேரர் போன்று இன்று முஸ்லிம்களுக்கு ஒரு  ஆசாத் சாலி என்ற நிலை தோன்றியுள்ளது. இவர்கள் இருவரும் பேசுவதால் சமூகத்தில்பிரச்சினை அதிகரித்துள்ளதே அன்றி குறையவில்லை.

அஸாத் சாலியின் நயவஞ்சகத்தனங்கள் தொடர்பில் தற்போது முஸ்லிம் சமூகம் இணங் கண்டுவிட்டது. முஸ்லிம் சமூகம் அவரை புறக்கணித்துவிட்டது. சமூகத்துக்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் அவர்மீண்டும் மீண்டும் சமூகத்தை பிரச்சினைகளில் மாட்டிவிடாமல் மௌனம் காப்பதே அவர் சமூகத்துக்கு செய்யும்மிகப்பெரிய சேவை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top