நாட்டில் கோட்டக்கல்வி அலுவலக முறை ஒழிக்கப்பட்டு
வலயக்கல்வி அலுவலகங்கள் அதிகரிக்கப்பட உள்ளன
(அபூ முஜாஹித்)
கல்வி
அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வலயக்கல்வி
அலுவலக மறுசீரமைப்பு
திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் உள்ள
98 கல்வி வலயங்களின்
எண்ணிக்கை 150 முதல் 200 வரை அதிகரிக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
கல்வி
வலயங்களின் அதிகரிப்புக் காரணமாக தற்போது நடைமுறையிலுள்ள
கோட்டக்கல்வி அலுவலக முறை முற்றாக ஒழிக்கப்படும்.
தற்போது நாட்டில்
330 கோட்டக்கல்வி அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்கு பொறுப்பாகக்
கோட்டக்கல்வி அதிகாரிகள் உள்ளனர்.
வலயக்கல்லி
அலுவலக மறுசீரமைப்புத்திட்டத்தின்
கீழ் இரண்டு
அல்லது மூன்று
கோட்டக்கல்வி அலுவலகப்பிரிவுகளை ஒன்றிணைத்து
ஆகக்குறைந்தது 50 பாடசாலைகளைக் கொண்ட வலயக்கல்வி அலுவலகங்கள்
அமைக்கப்படும். புதிய மறுசீரமைப்புத்திட்டத்தின்
கீழ் இனரீதியான
முறையில் அமைக்கப்பட்டுள்ள
கல்வி வலயங்கள்
முற்றாக ஒழிக்கப்பட்டு
மொழி ரீதியிலான
கல்வி வலயங்கள்
ஏற்படுத்தப்படவுள்ளது.
நாட்டில்
கிழக்கு மாகாணத்திலேயே
ஆகக்கூடுதலான கல்வி வலயங்கள் உள்ளதுடன் இன
ரீதியாக தமிழ்,
முஸ்லிம், சிங்களம்
என கல்வி
வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணக்கல்வி
வலயக்கட்டமைப்பு முற்றாக மாற்றம் செய்யப்படுமெனவும் கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
இம்மாற்றங்களுக்கேற்ப
வலய, கோட்ட
மட்டத்தில் அங்கீகரிக்கப்படாத பதவிகளில்
இணைப்புச் செய்யப்பட்டுள்ள
உத்தியோகத்தர்கள் அனைவரும் அவர்களது நிரந்தர பதவிகளுக்கு
அனுப்பி வைக்கப்பட
உள்ளனர்.
1993ற்கு முன்னர் இருந்தது போன்று
வட்டாரக்கல்வி அதிகாரி முறை மீண்டும் நடைமுறைக்குக்
கொண்டு வரப்படவுள்ளமையும்
இப்புதிய வலய
நிருவாக கட்டமைப்பு
மாற்றத்தில் மிக முக்கிய மாற்றமாகும்.
0 comments:
Post a Comment