இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்


இலங்கையில் இடம்பெறும் சர்வதேச வெசாக் வைபவ கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் பொருட்டு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 11ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
 இந்தியப் பிரதமரோடு இந்தியாவின் பல்துறைசார் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவும் இலங்கை வரவுள்ளது.
இம்மாதம் 12ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள விசேட சர்வதேச வெசாக் தின வைபவ நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் விசேட அதிதியாக கலந்து கொள்வார்.

இந்த நிகழ்வின் நிறைவு விழா கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெறும். அந்த நிகழ்விற்கு நேபால் ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி அம்மையார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார். பண்டாரி அம்மையார் இம்மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையில் இடம்பெறும் சர்வதேச வெசாக் தின வைபவங்களில் கலந்து கொள்வதற்காக பௌத்த நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த சுமார் 750 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று புத்த சாசன அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top