பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு

187 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்

அமைச்சர் சாகல ரட்நாயாக்க தெரிவிப்பு


பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயாக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜயவர்தன ஓய்வு பெறும் போது அவருக்காக 65 மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர மஹிந்த ராஜபக்ஸவுக்கு 187 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
 அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் எதுவித பாரபட்சம் இன்றி கவனம் செலுத்தி வருகிறது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயாக்க பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடாபாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று காலை முன்வைத்து கேள்வியொன்றுக்கு அமைச்சர் சாகல ரட்நாயாக்க பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top