வெள்ளவத்தை பகுதியில் மாடிக்கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்து
பாரிய அனர்த்தம்! 20 பேர் காயம்.. 10 பேரின் நிலை கவலைக்கிடம்
.
வெள்ளவத்தையில்
கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து
விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 20 பேர்
படுகாயமடைந்துள்ள நிலையில், 10 போின் நிலை கவலைக்கிடமாக
உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று பேர்வரை காணாமல்
போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்,
குறித்த பகுதியில் தீயணைப்பு படை வீரர்கள், இராணுவத்தினர்
ஆகியோர் மீட்பு பணிகளை முன்னெடுத்து
வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன
நிறுத்த பகுதியியே இடிந்து விழுந்துள்ளது. இதில்
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் முழுமையாக
சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயங்களுக்கு உள்ளானவர்களுள் களுபோவில வைத்தியசாலையில் 7 பேர் அனுமதிக்ப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் காயங்களுக்கு உள்ளானவாகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.




0 comments:
Post a Comment