மின்சார நுகர்வோருக்கு இடையில்
(LED Lamps) மின்குமிழ்களை
சலுகை விலைத்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
குறைந்தளவிலான மின்சாரத்தை நுகரும் நுகர்வோருக்கிடையில் பயன்படுத்தப்படும் அதிக மின்விரயமாகும் மின்குமிழ்களுக்கு பதிலாக மிகவும் வினைத்திறன் மிக்க LED மின்குமிழ்களை பாவிக்கும் வகையில், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அந்த மின்சார நுகர்வோருக்கு இடையில் குறித்த மின்குமிழ்களை சலுகை விலைத்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வட்டியில்லா 24 தவனைகளில் மாதாந்த மின்கட்டணத்துடன் அறவிடுவதற்கு முடியுமான முறையில் குறித்த மின்குழிழ்களை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
மாதாந்தம் 1-30 வரையான மின் அலகுகளை பாவிக்கும் வீடுகளுக்கு 02 மின்குமிழ்களும், 30-60 வரையிலான மின் அலகுகளை பாவிக்கும் வீடுகளுக்கு 03 மின்குமிழ்களும், 60-90 வரையிலான மின் அலகுகளை பாவிக்கும் வீடுகளுக்கு 04 மின்குமிழ்களும் வீதம் பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான 10 இலட்சம் LED மின்குமிழ்களை விலை மனுக்கோரலின் மூலம் கொள்வனவு செய்வதற்கும் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment