எதிர்வரும் 24 ஆம் திகதி
போராட்டத்தில் ஈடுபட உள்ள பாடசாலை அதிபர்கள்
கொழும்பில் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு
எதிர்வரும் 24 ஆம் திகதி பாடசாலை அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 24 ஆம் திகதி சுகயீன விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பதினோராயிரம் பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கொழும்பில் அன்றைய தினம் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்தனெடுக்கப்பட உள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவைச் சங்கம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குதல் உள்ளிட்டபல பிரச்சைனைகள் இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment