29ஆம் திகதி முதல் ஜூன்
மாதம் 4ஆம் திகதி வரை
தேசிய சுற்றாடல் வாரம்
சர்வதேச
சுற்றாடல் தினத்தை
முன்னிட்டு இம்மாதம் 29ஆம் திகதி முதல்
ஜூன்
மாதம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை
தேசிய சுற்றாடல்
வாரமாக பிரகடனப்படுத்தப்படவிருப்பதாக
மகாவலி அபிவிருத்தி
மற்றும் சுற்றாடல்துறை
அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகைக்கு அமைவாகவே சுற்றாடல்
வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
ஜூன் மாதம் 5 ஆம்
திகதி சர்வதேச
சுற்றாடல் தினம்
அனுஷ்டிக்கப்படவுள்ளது. இயற்கையுடன் ஒன்றிணைந்த
மக்கள் என்பதே
இம்முறை தொனிப்பொருளாகும்.
சர்வதேச
சுற்றாடல் தினத்திற்கான
தேசிய வைபவம் ஜூன்
மாதம் 5ஆம்
திகதி பதுளை
மாவட்டத்தில் நடைபெறவுள்ளது
0 comments:
Post a Comment