முட்டாள்தனமாகச் செயல்பட்டு முஸ்லிம்களை

மேலும் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம்



ஞானசார தேரர் கைது விடயத்தில்  நடந்துகொண்ட விதம் அரசாங்கத்தின் பொறுப்பின்மையை காட்டுவதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது..
அண்மையில் இஸ்லாத்தை அவமதித்த ஞானசார தேரர் மீது முஸ்லிம் தரப்புகள் முறைப்பாடு செய்திருந்தனர்.அது மட்டும் அல்லாமல் அவரை கைது செய்யுமாறு அலுத்தம் கொடுத்திருந்தார்கள்.
கடந்த நாட்களில்  தன்னை கைது செய்யப்போவதாக ஞானசார தேரர் கூறிவந்த ஏற்கனவே கூறிவந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேளை அவரை நடு வீதியில் கைது செய்ய முற்பட்டு அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இரு தீ வைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.நாளை திங்கள் தான் விசாரனைக்காக வருவதாக ஞானசாரர் கூறியிருக்க இந்த அரசு அவரை நடு வீதியில் கைது செய்து முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ள முயற்சிக்கிறதா? என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.
அலுத்கமையை காட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதுவரை அது தொடர்பான விசாரனைகளை முன்னெடுக்கவில்லை மட்டக்களப்பில் ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பில் கண்டுகொள்ளவில்லை.நேற்று ஞானசார தேரர் விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டவிதத்தைப்பார்க்கும் போது அதன் நிதானமின்மையை காட்டுகிறது.

மேலும் நீதிமன்ற உத்தரவு ஒன்று இல்லாமல் நடுவீதியில் தேரர் ஒருவரை கைது செய்ய முயற்சி செய்யதமையானது முஸ்லிம்கள் மீது ஞானசார தேரர் குழுவுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top