வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்த அனர்த்தம்

கட்டடம் கட்டுபவர், கட்ட அனுமதி கொடுத்தவர்

அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா



எந்த ஒரு திட்டமிடலும் இன்றி குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் அளவில் மிகவும் சிறியவை எனவும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடத்தை பார்வையிட சென்ற போதே பிரதி அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சிறிய அளவிலான கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது, இவர்கள் அனுமதி பெற்றா குறித்த கட்டடத்தை நிர்மாணித்துள்ளார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாதுகாப்பற்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி கொடுத்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். கட்டுபவர், கட்ட அனுமதி கொடுத்தவர் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என இதன்போது பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top