உடைந்து வீழ்ந்த வெள்ளவத்தை கட்டடம்

அதன் முழுமையான தோற்றம்

வெள்ளவத்தையில் திருமண மண்டபம் ஒன்று உடைந்து வீழ்ந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகாமையிலுள்ளஎக்ஸலன்சிதிருமணம் மண்டபமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
இந்த கட்டடம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக பகுதிப்பகுதியாக நிர்மாணிப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும் இந்த கட்டடத்தின் தரநிலை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டதாக சவோய் திரையரங்கின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டடத்தின் பின் புறத்தில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த கட்டடம் உடைந்து விழுவதற்கு முன்னர் காணப்பட்ட நிலை தொடர்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 25 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் இவர்களில் 13 களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சியவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்கள். அதில் சிலர் கவலைக்கிடமான முறையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எந்த ஒரு திட்டமிடலும் இன்றி குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் அளவில் மிகவும் சிறியவை எனவும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடத்தை பார்வையிட சென்ற போதே பிரதி அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சிறிய அளவிலான கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது, இவர்கள் அனுமதி பெற்றா குறித்த கட்டடத்தை நிர்மாணித்துள்ளார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாதுகாப்பற்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி கொடுத்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். கட்டுபவர், கட்ட அனுமதி கொடுத்தவர் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என இதன்போது பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top