யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட
பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தவேளி சந்தியில் நேற்று நள்ளிரவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வானத்தில் பயணித்த பொலிஸாருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதி மக்களிடையே பதற்ற நிலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சம்பவ இடத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 comments:
Post a Comment