இரண்டாம் முறை ஈரான் ஜனாதிபதியானார்
ஹஸன் ரவுஹானி!

ஈரானில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் ஹஸன் ரவுஹானி.
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மிதவாதியான ரவுஹானிக்கு முதலில் இருந்தே தொடர் ஆதரவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து ஈரானின் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் ரைசி போட்டியிட்டு தோல்வியுற்றார்.
தீவிரக் கொள்கைவாதிகள் முக்கியப் பதவிகளுக்கு வருவது சரியல்ல என்ற ரவுஹாணியின் பிரசார உரை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதாகக் கூறப்படுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவின் இறுதியில் 70% வாக்குகள் பதிவாகியிருந்தன. இது அந்நாட்டு மக்கள் தொகை கணக்கின்படி நான்கு கோடி பேர் வாக்களித்துள்ளனர். இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மதியம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே நடந்து முடிந்த இத்தேர்தலில் தற்போதைய ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுஹானி 58.6% வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் வெறும் 39.8% வாக்குகளுடன் தோல்வியைச் சந்தித்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top