டாக்டர் ஸாகிர் நாயக்கிற்கு
சவூதி அரேபிய குடியுரிமை
பிரபல
இஸ்லாமிய மத
போதகர் டாக்டர் ஸாகிர் நாயக்கிற்கு,
சவூதி அரேபிய அரசு
குடியுரிமை வழங்கியுள்ளது.
இஸ்லாமிய
மத போதகர்
ஸாகிர் நாயக்,
‘இஸ்லாமிய ஆராய்ச்சி
மையம்’ என்ற
அறக்கட்டளையை இந்தியாவில் நடத்திவந்தார்.
‘அவர், அந்த
அறக்கட்டளையின் மூலம் இளைஞர்களிடம் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக
குற்றம் சுமத்தி
அவரது தொண்டு
நிறுவனத்தை இந்திய அரசு தடைசெய்தது.
இதனையடுத்து
தேசியப் புலனாய்வு
அமைப்பு கடந்த
டிசம்பர் மாதம்,
அவரது வீடு
மற்றும் அலுவலங்களில்
சோதனை நடத்தியது.
பின்னர் ஸாகிர்
நாயக் விசாரணைக்காக
நேரில் ஆஜராக
வேண்டும் என்று
தேசியப் புலனாய்வு
அமைப்பு கடந்த
மார்ச் மாதம்
அழைப்பாணை அனுப்பியது.
எனினும்
அவர் இதுவரை
ஆஜராகமல் சவூதிய
அரேபியாவில் தங்கி இருப்பதன் காரணமாக அவரை
கைதுசெய்யும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு
வருகின்றது.
இந்நிலையில்
சவூதி அரேபிய அரசு
ஸாகிர் நாயக்கிற்கு
குடியுரிமை வழங்கியுள்ளது.
இன்டர்போல்
அதிகாரிகளின் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, அவருக்கு
குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment